Posts

Showing posts from May, 2021

சங்ககாலம் ஒரு பொற்காலம்!

Image
  1800 ஆண்டுகளுக்கு முன்பு முடியாட்சி தொடங்கிய காலம் சங்க காலம். அது பொற்காலமாகப் போற்றப் பட்டது.  இதன் காரணம் அக்கால மக்களின் வாழ்க்கைமுறை, அரசியல், தமிழ்மொழி ஆட்சி, இலக்கியவளம், புலமைப்போற்றல், பண்பாடு நாகரிகம் இவையே.போர் நடந்தாலும் நாட்டு மக்களை பாதிக்கவில்லை. தமிழ் மொழியே ஆட்சி மொழியாய் இருந்தது. அதன் காரணமாக பல தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் எழுதப்பட்டன.தமிழ்க் கல்வி சிறப்பாகப் போற்றப்பட்டது. தமிழ்ப் புலவர்களான ஔவையார், பாடினியார் போன்ற பல பெண்பால் புலவர்கள் இருந்தனர். பெண்கள் பல உரிமைகள் பெற்றிருந்தனர். சாதி சமயப் பூசலும் தீண்டாமைக் கொடுமையும் அன்று இல்லை. சிற்பம் ஓவியம் உழவு நெசவு ஆகிய தொழில்கள் சிறப்புற்று விளங்கின.  நீர்வளமும் நிலவளமும் சிறப்பு பெற்றிருந்த சங்ககாலம்  தமிழகத்தின் பொற்காலமே!

இன்று உலக தம்பதியர் தினம்..💞💕💏

Image
  இன்று உலக தம்பதியர் தினம்..💞💕💏 ஒருவராய்ப் பிறந்தோம்.. இருவராய் இணைந்தோம்.. இதயத்தால் கலந்தோம்.. ஒருவருக்கொருவர்  விட்டுக் கொடுத்து  மனதால் இணைந்து சின்னச் சின்ன சந்தோஷங்களையும் இணைந்து ரசித்து.. எத்தனை கஷ்டம்  வந்தாலும் அதனை  எதிர்நோக்கி  வெற்றி கண்டு... ஆசை அன்பு நேசம் பாசம் அனைத்திலும் இணை பிரியாமல்.. இன்றுபோல் என்றும் இனிமையாய் வாழ இதயம் கனிந்த  தம்பதியர் தின நல்வாழ்த்துக்கள்!

கண்ணாமூச்சி

Image
ஒவ்வொரு கண்ணாமூச்சி விளையாட்டிலும் ஒரே இடத்தில் ஒளியும் தம் குழந்தைகளை ஒரு முறை கூட கண்டு பிடிக்க முடிவதில்லை பாசமுள்ள அப்பாக்களால்!   அதே பிள்ளை பின்னால் அப்பாவை மறந்து வேறிடத்தில் பாசம் வைத்து விலகிச் சென்று கண்ணாமூச்சி ஆடுகிறான் பாவப்பட்ட பாசத் தந்தையோடு!

அரவணைப்பு

Image
அந்த ஆலய வாசலில் எப்போதும் பிச்சைக்காரர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அன்று ஒருவிசேஷம் என்பதால் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. ராஜு தன்மனைவி அருணா,  மகள் அட்சயாவுடன் கோவிலுக்கு வந்தான். அங்கு ஒரு குழந்தையுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒருபெண்ணைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. பார்க்க நன்றாக இருந்தாள். அருணா அவளுக்கு ஐம்பது ரூபாய் கொடுத்துவிட்டு, அவள் ஏன் பிச்சை எடுக்கிறாள் என்று கேட்டபோது, தான் நல்ல குடும்பத்தில் பிறந்து ஒரு பையனிடம் காதல் கொண்டு ஏமாந்துவிட்டதாகவும், திரும்ப பிறந்தவீடு செல்ல மனமில்லை என்றும், ஏதாவது வேலை கொடுத்தால் செய்வதாகவும் சொன்னது அருணாவிற்கு பாவமாக இருந்தது. அருணா ராஜுவிடம் ...இவளைப் பார்த்தால் நல்ல குணமுடையவளாக இருக்கிறாள். பாவம் ஏமாந்து விட்டாள். சுயகௌரவம் இருப்பதால் பிறந்த வீட்டுக்கு திரும்ப மனமில்லை அவளுக்கு. இந்த நிலையில் அவளுக்கு ஒரு அரவணைப்பு தேவை. இவளை அழைத்துச் சென்று வேலைக்கு வைத்துக் கொள்ளலாமா?.. என்றாள். சற்று யோசித்தவன்,அதனால் ஏதாவது பின்விளைவுகள் வந்தால் என்னசெய்வது என யோசித்தான். அவளோ, ..என்னால் உங்களுக்கு எந்த கஷ்டமும் வராது. என்னைத் தேடி ய

அன்பெனும் அழகிய குணம்..

Image
நாள்தோறும்.. அன்புக்கு உண்டோ அடைக்கும்தாழ்.. அனுபவிப்பவரே அறிவர் அன்பின் மகிழ்ச்சியை.. மௌனவார்த்தைகளும் கோபமும் கூட அன்பின் வெளிப்பாடுகளே.. கிடைத்த அன்பை நிலைக்க வைப்பதே சுகம்.. நமக்கு பிடித்தவரிடம் கெஞ்ச வைப்பது அன்பு.. நம்மைப் பிடித்தவரைக் கொஞ்ச வைப்பதும் அன்பே.. அழகை விட அன்பைத் தரும் உள்ளமே அழகானது.. அறிவாளிகளை விட அன்பானவரையே நம் மனம் விரும்புகிறது.. அன்புக்கு ஏங்குபவரே நாம் அன்பு செலுத்த ஏற்றவர்.. அன்பும் அக்கறையும் இணைந்ததே இனிய வாழ்வு.. பிடித்தவரிடம் அன்பு செய்வதை விட பிடிக்காதவரையும் தன்வயப் படுத்துவதே பேரன்பு.. வாழ்க்கையின் பக்கங்களை அழகாக்கும் எழுதுகோல் அன்பு.. தாயிடம் மட்டுமே கிடைப்பது தூய அன்பு.. நெஞ்சிலும் தோளிலும் சுமப்பது தந்தையன்பு.. காதலும் காமமும் கலந்தது துணையின் அன்பு.. பாசமும் பரிவும் பிணைந்தது பிள்ளைகள் அன்பு.. அன்புடன் பேசுவோம்..! அவரவர் இடத்திலிருந்தே..! அது நம் உறவை பலப்படுத்தும்..! நம்மை ஒன்றுபடுத்தும்..! அன்பை விதைப்போம் - அதில் மகிழ்ச்சி எனும் பூக்களை அறுவடை செய்வோம்..! இன்பம்  கூட்டி  இனிய ராகம் மீட்டி இணைந்து வாழ்வோம் இதயம் கலந

மறைந்த தமிழ் மொழி

Image
  எத்தனை சொல்ல? சொல்லி மாளாது. இன்று எல்லா மக்களுமே ஆங்கில உரையாடல்தான். என் பேத்தியிடம் தமிழில் ஏதாவது கேட்டால்...இங்கிலீஷில் கேளு. பதில் சொல்கிறேன்...என்கிறாள்

நெஞ்சில் பெய்த மாமழை..

Image
கண்ணிலே கலந்தாய்! எண்ணத்தில்நின்றாய்! வண்ண வண்ணக் கனவுகளை வாரித் தெளித்தாய்! திண்ணமான உன் அன்பில் விண்ணிலே பறந்தேன்! சின்னச் சின்ன சந்தோஷங்களை சன்னமாய் அனுபவித்தோம்! அழகான பிள்ளைகள்! அறிவாக வளர்த்தோம்! சிறப்பான கல்விதனை சீராகக் கொடுத்தோம்! தீமைகள் விலக்கி திறமைகள் வளர்த்தோம்! பெருமையான தருணங்களில் உரிமையுடன் உடனிருந்தோம்! அவரவர் பாதையில் சென்றபின் இன்பமாய் நாம் இருவர் மட்டுமே! இதயம் மகிழ வையகம் சுற்றுவோம்! இனி என்றென்றும் நமக்கு தேனிலவே! ஆனந்தமாய் நம் நெஞ்சில் மாமழையாய்.. காதல் வாழ்வை இனி காவியமாய்த்  தொடர்வோம்! கவிதையாய் வாழ்வோம்!

வீணை

Image
  வீணையை மீட்டினேன்.. ராகம் பிறந்தது! வீசும் தென்றல் தீண்டும்வேளை பேசும் எந்தன் அழகிய வீணை ! என் உடல் தோறும் ஊறுமென் காதலை உருக்கமாக மீட்டுமே என் வீணையின் தந்திகள்! இசையே ! நீ என் சுவாசத்தில் கலந்து விரல் வழி அசைந்து வீணையை மீட்டுகிறாய் - இசை மோகத்தைக் கூட்டுகிறாய் தீண்டினேன் தீண்டவும் வீணையும் தந்ததே என் நாயகன் நகைக்கின்ற மன்மத ராகம் !

பதைபதைப்பு..

Image
அத்யாவசியமாய் வெளியில் செல்லும்போது பதைபதைக்கும் மனதைக் கட்டுப் படுத்த முடியவில்லை.. ஒரு அடி தூரத்தில் யார் வந்தாலும் ..இவருக்கு கொரோனா இருக்குமோ?..என்ற பதைபதைப்பு.. எவர் இருமினாலும் தும்மினாலும் ஏதோ நமக்கு கொரோனா வந்து விடுமோ என்ற பதைபதைப்பு.. மனிதர் பாம்பையோ சிங்கத்தையோ புயலையோ மழையையோ வெள்ளத் தையோ கண்டு பதைபதைக்கலாம்.. அடுத்தவர் நம்மை அன்புடன் அணைப்பதோ கை கொடுப்பதோ இன்று நம்மை பயமுறுத்தும் விஷயங்கள்.. மனிதரை மனிதரே கண்டு பயந்து பதைபதைத்து ஒதுங்கும் இந்த நாள் விரைவில் மாற இறைவனிடம் இறைஞ்சுவோம்🙏

மைவிழிப்பார்வை

Image
  கண்ணே! என்னழகு சித்திரமே! உன் மைவிழிப் பார்வையில் என் மனம் மயங்கிப் போனதம்மா! நின் கயல்விழி பார்வையிலே என் அங்கமெல்லாம் சிலிர்க்குதம்மா! எனைக் கண்டு நீ சிரிக்கையிலே நான் பட்ட வலியெல்லாம் போனதம்மா! உனைக் கட்டியணைத்து முத்தமிட ஆவலைத் தூண்டுதம்மா! உனைக் காண்போர் உன் அழகைப் பற்றி புகழ்ந்து பேசும் போதெல்லாம் என் மனம் பதைக்குதடி! மையிடாமலே மயக்கும் உன்னழகில் அடுத்தவர் கண் படாதிருக்கவே உன் பட்டுக் கன்னத்தில் பெரிதாக வைக்கிறேன் ஒரு கரும்பொட்டு! ஆராரோ..ஆரிரரோ! உன் அழகு மைவிழிகளை மூடி நீ தூங்கடி என் கண்ணே! செல்லப் பெண்ணே!

நல்லதொரு குடும்பம்..

Image
"ஜோதி! இங்க வாம்மா! சமையல் அப்பறம் செய்யலாம். உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அலுவலகத்திலிருந்து வந்து முகம் கழுவி, நைட்டிக்கு மாறியவள், தயாராக வைத்திருந்த காஃபியைக் குடித்தாள். இரவு சமையலைக் கவனிக்க அடுக்களைக்குள் சென்றவளை கமலியின் குரல் தடுத்தது. "இதோ வரேம்மா! என்ன விஷயம்?" அருகில் வந்து அமர்ந்தாள் ஜோதி. "என்னங்க...நீங்கதான் சொல்லுங்களேன்!" "என்னப்பா...அம்மா என்ன சொல்றாங்க?" "அது.... ஒரு கல்யாண விஷயம். நீயே சொல்லேன் கமலி!" கல்யாணம் பற்றிப் பேசினாலே பிடி கொடுத்துப் பேசாமல் நழுவி விடுவாள் ஜோதி! அதனால் தயங்கிய வெங்கடாசலம், கமலியைக் கைகாட்டி விட்டார். "கல்யாணமா? யாருக்கு? எங்க?" "அம்மா ஜோதி! இன்னும் எத்தனை நாளைக்கு நீ இப்படி தனியா வாழ முடியும்? சேகர் போய் விளையாட்டுப் போல இரண்டு வருஷம் ஆயாச்சு. நாங்க இன்னும் எவ்வளவு நாள் சாஸ்வதம்? உனக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்க நானும், அப்பாவும் முடிவு பண்ணியிருக்கோம்மா! இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னைப் பார்க்க அந்தப் பையன் வருவான். இந்த நைட்டியை மாற்றி ஒரு நல்ல புடவையைக் கட

இணைந்த மதங்கள்

Image
நாள்தோறும்... "வ்ருஷாலி! அவளை வெளியே போகச் சொல்லு. நான் ராக்கியெல்லாம் கட்டிக்கொள்ள தயாராக இல்லை. எனக்கும், அவளுக்கும் எந்த உறவும் இல்லை" ராகேஷ் கோபத்துடன் வெளியே சென்று விட்டான். ஷீலாவுக்கு அழுகை வந்து விட்டது. வ்ருஷாலியின் தோள் மேல் சாய்ந்து அழ ஆரம்பித்து விட்டாள். "அண்ணி! நான் என்ன பெரிய தப்பு செய்து விட்டேன்? என் மனதுக்குப் பிடித்தவரைக் கல்யாணம் செய்து கொண்டது தப்பா? சுந்தர் என்னை எப்படி வைத்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா?" "அழாதே ஷீலா! நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டேன். உன் அண்ணன் மனதை மாற்றவே முடியவில்லை. நீ ஏதோ மிகப்பெரிய தப்பு செய்து விட்டதாகச் சொல்கிறார். நான் என்னம்மா செய்வது?" வ்ருஷாலியின் இயலாமை அவள் பேச்சில் தெரிந்தது. "அண்ணா எப்பவுமே அப்படித்தானே அண்ணி! தான் எடுத்த முடிவிலிருந்து மாறவே மாட்டார். நான் இதுவரை ஒரு வருஷம் கூட ரக்க்ஷா பந்தனுக்கு அண்ணனுக்கு ராக்கி கட்டி, திலகம் வைக்காமல் இருந்ததில்லை. அண்ணன் இந்த ஒன்பது மாதத்தில் கொஞ்சமாவது மனம் மாறியிருப்பார் என்று நினைத்து தான் வந்தேன்". "உன்னை நினைத்து எனக்கு மிக வரு

நற்பொழுது மலரட்டும்!

Image
நாள்தோறும்.. இன்றைய உலகத்தை பார்க்கிறேன். பரபரப்புடன் படு வேகமாக இயங்கிக் கொண்டிருந்த இந்த உலகம் கடந்த இரண்டு வருடங்களாக ஏன் இப்படி சட்டென்று அமைதியானது? இது சாதாரண அமைதியில்லை.. மயான அமைதி... எல்லாம் இன்ப மயம் என்று ஆடிப்பாடிக் கொண்டிருந்த நாம் ஆடிப் போயிருப்பது நம்மைக் கண்டு அஞ்சாத ஒரு சின்னக்கிருமியால்... எதனால் இந்த நிலைமை நமக்கு? என்ன தவறு செய்தோம்? ஒட்டு மொத்த உலகத்திற்கும் ஏன் இந்த தண்டனை? நம்மைக் காப்பாற்றுவார் என்று நம்பிய கடவுளும் நம் கண்ணுக்கெட்டாத தூரத்தில் தம்மை மறைத்துக் கொண்டது ஏன்? இவை விடை தெரியாத கேள்விகள்... மனிதன் மமதை கொண்டு எல்லாம் என்னால் முடியும் என்று மார்தட்டிக் கூறி இறைவன் தந்த பூமி ஆறு குளம் நீர்நிலை மலைகள் தெளிந்த வானம் இவற்றை மாசுபடுத்தியபோது பொறுமையோடு இருந்த அந்த இயற்கைக்கும் கோபம் வந்து விட்டதோ... என்றும் உறங்கா நகரமான நியூயார்க் அமைதியாக உறங்கிக் கிடக்கிறது... காதல் களியாட்டங்களுக்கு பெயர் பெற்ற பாரிஸில் இன்று அவற்றின் எதிரொலி மட்டுமே கேட்கிறது... பழமை சின்னங்களின் சிகரமான ரோம் இன்று பாலைவனமாகக் காட்சி தருகிறது... அனைத்து நாடுகளையும் ஆட்டிவ

துணிவே துணை

Image
  நாள்தோறும்... துணிவே துணை.. சாதனை படைக்கவும் சரித்திரத்தில் இடம் பெறவும்  துணிவு வேண்டும்.. கனவில் மகிழ்ந்து அந்தக் கனவை நனவாக்க துணிவு வேண்டும்... 'இந்தச் செயலை நீ செய்வது கடினம்' என்போரின் பேச்சை புறம் தள்ளி அதனை நிறைவேற்றிக் காட்ட துணிவு வேண்டும்... அறிவுரை சொல்பவரை அலட்சியம் செய்து நாம் நினைத்ததை செயல்படுத்த துணிவு வேண்டும்... வாழ்க்கை எனும் சறுக்கு மர விளையாட்டில் ஏறினாலும் இறங்கினாலும் நம்பிக்கை இழக்காமல் வெற்றிபெறத் துணிவு வேண்டும்...

புன்னகை அழகு

Image
  நாள்தோறும்.. நம் உள்ளத்து உணர்வுகளை ‘பளிச்’சென வெளிக்காட்டுவது நம் முகம். அந்த முகம் எப்போதும் சிரித்துக் கொண்டே இருந்தால் எத்தனை அழகாக இருக்கும்? ஒரு புன்னகை சிந்த விலையேதும் தேவை யில்லை. ஆனால் அந்த ஒரு புன்னகை அவரை பெரிய கூட்டத்திலும் கூட நடுநாயக மாக்கும் தன்மையுடையது. உடலில் 300 வகையான தசைகள், நாம் சிரிக்கும்போது அசைகின்றன. அதனால் நம்  மனமும் தேகமும் சிரிக்கும்போது புத்துணர்ச்சியும் , ஆரோக்கியமும் பெறுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆய்வொன்றின் படி ஒரு நாளைக்கு சராசரி மனிதன் 15 தடவைகளும், குழந்தைகள் கிட்டத்தட்ட 400 தடவைகளும் சிரிக்கின்றோமாம். இதிலிருந்து மனிதனுடைய வயதிற்கேற்றவாறு சிரிப்பு குறைந்துகொண்டு போவதை அறிய முடிகிறது. நாம் சிரிக்கும்போது 'என்டோர்பின்ஸ்' என்னும் திரவப்பொருள் நம் மூளையில் உருவாகி ஒருவகையான நம் உடலுக்குப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. ‘சிடுசிடு’வென்ற முகத்துடன் இருப்பவரை யார்தான் விரும்புவர்? சிரிப்பதற்கு கஞ்சப் படுபவர்கள் பல சந்தோஷங்களை வாழ்வில் இழந்தவர்களாவர். சிரிப்பதற்கு ஆகும் நேரம் சிறிது; ஆனால், அதன் பலனோ மிகப் பெரியது! வாயால் சொல்லும்வரை காத

பாராட்டு ஒரு டானிக்

Image
நாள்தோறும்.. எல்லா பேச்சுகளிலும் நமக்கு மிகவும் இனிமையானதும், மகிழ்ச்சி தருவதும் பிறர் நம்மைப் பாராட்டிப் பேசும் வார்த்தைகளே' என்பது ஒரு அறிஞரின் கூற்று. பாராட்டை விரும்பாத மனிதர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். முகத்திற்கு நேராக மறுத்தாலும் உள்ளுக்குள் மனது மற்றவர்கள் நம்மைப் புகழ்வதை விரும்புகிறது. அடுத்தவர் செய்யும் செயல் மிகச் சாதாரண மானதாக இருந்தாலும் அதனை உணர்ந்து பாராட்டும் பண்பு அனைவருக்கும் இருப்பதில்லை. எத்தனை சுலபமான, சிறிய செயலையும்  நேர்த்தியாக செய்தாலும் அதைப் பாராட்டுவதில் என்ன தவறு?அது தரும் சந்தோஷம் பாராட்டப் பட்டவர்களே அறிவர்.வெளிநாட்டினர் சிறு விஷயத்திற்கு கூட நன்றி சொல்வார்கள். அவர்கள் செல்லும் வழியில் நிற்கும் நாம் சற்று நகர்ந்து கொண்டாலும் 'தேங்க்யூ' என்று முகமலர சொல்லிவிட்டு செல்வார்கள்! 'கடமையைச் செய், பலனை எதிர் பாராதே'என கீதை சொன்னாலும், தொடர்ந்து  முறையாக நம் கடமையைச் செய்ய, முதல் முறை செய்த வேலைக்கு  ஒரு சிறிய பாராட்டு தேவைப்படுகின்றது. இந்த பாராட்டு என்பது மிகப்பெரிய பரிசாகவோ,  இல்லை பணமாகவோ இருக்கவேண்டிய அவசியம் இல்லை. நன்றி என்ற ஒரு 

கொலுசு ஒலி

Image
  அது ஒரு சிறு கிராமம்அன்று கமலியின் கணவரின் தாத்தாவிற்கு தொண்ணூறு வயது நிறைந்ததை ஒட்டி  ஹோமம், பூஜைகள் நடந்தது. அவருக்கு மனைவி மறைந்து ஐந்து ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு நான்கு மகன்களும் இரண்டு மகள்களுமாக பெரிய குடும்பம். இன்று  அவரின் ஆசிகளைப் பெற அத்தனை பேரும் குடும்பத்தோடு வந்திருந்தார்கள்.ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக வீடே அமர்க்களமாக இருந்தது. அன்று இரவு எல்லோரும் நிலா வெளிச்சத்தில் அமர்ந்து சாப்பிட்டபின் மாடியில் படுத்துக் கொண்டனர். கமலிக்கு திறந்த வெளியில் படுத்து பழக்கமில்லாததால் வெகு நேரம் தூக்கம் வரவில்லை. சற்று கண் அசந்த நேரம் ஜல்ஜல் என்று கொலுசு ஒலி சத்தம் கேட்டது. கொலுசு அணிந்த யாரோ கீழே செல்கிறார்கள் என நினைத்தவள் திரும்பிப் படுத்து உறங்க முயற்சித்தாள். அந்த சத்தம் நெருங்கி வருவது போல் கேட்க, எழுந்து பார்க்கலாமா என்று நினைத்தவள் பயத்தில் தலையோடு கால் போர்த்திக் கொண்டு படுத்து விட்டாள். சற்று நேரத்தில் அந்த  ஒலி வெகு தூரம் சென்று நின்று விட்டது. காலையில் எழுந்த கமலிக்கு இந்த விஷயம் மனதிலேயே இருந்து பயத்தை ஏற்படுத்தியது. ஏதாவது பேயோ, இறந்தவர் ஆவியோ என்றெல்லாம் மனதில் ஒரே குழப

அடையாளம்

  அன்பின் அடையாளம் அம்மா! ஆதரவின் அடையாளம் அப்பா! காதலின் அடையாளம் மனைவி! பாசத்தின் அடையாளம் குழந்தைகள்! நேசத்தின் அடையாளம் நல்ல நண்பர்கள்!

தொல்லை

காதல் ஒரு தொல்லை.. காதலிக்கும்போதும் காதல் நிறைவேறாத போதும் காதலிப்போர் தூக்கத்தையும் தோல்வி அடைந்தோர் தூக்கத்தையும் தொல்லை செய்யும்!

விடுமுறை

Image
ஞாலம் புகழும் ஞாயிறுக்கு இன்றும் இல்லை விடுமுறை! சூரியன் உதித்த பின்னும் எழுந்திருக்க மனமில்லை! இன்று விடுமுறை என்றாலே மனதில் வந்து ஒட்டிக் கொள்ளும் சோம்பல்! ஆறு நாட்கள் ஓடிய ஓட்டத்துக்கு இன்று ஒருநாள் கட்டாய ஓய்வு! சிறார்களின் விளையாட்டு சத்தம் வீதியை நிறைக்கும்! தொலைக்காட்சி பெட்டிக்கு மட்டும் அன்று ஓய்வில்லை! அம்மாக்களுக்கோ விடுமுறை இல்லாத அடுப்படி வேலை!

அஞ்சல் நிலையம்

  இன்றைய குழந்தைகளுக்கு அஞ்சல் நிலையம் பற்றித் தெரிய வாய்ப்பே இல்லை...கடிதம் எழுதுவதும் எப்படி என்று தெரியாது! எட்டாம் வகுப்பு படிக்கும் என் பேத்திக்கு கடிதம் எழுதுவது என்னவென்றே தெரியாது! இன்றுதான் உலகமே உள்ளங்கையில் ஆயிற்றே! அவள் இது பற்றி அறியவே இந்த கடிதம்! அன்புள்ள ப்ரீத்தி பாட்டி அநேக ஆசிகள். நீ எப்படி இருக்க? பொம்மைகுட்டி எப்படி இருக்கு? சமத்தா படிக்கறேளா? பாடமெல்லாம் ஸ்கூல்லருந்து வீடியோல வரதா? புரியற்தா? அம்மா அப்பா நன்னா இருக்காளா? அப்பா அடிக்கடி டூர் போயிட்றாம்பியே..இப்போ அப்பாவோட நன்னா என்ஜாய் பண்றேளா? கொரோனாவால கிடைச்ச சான்ஸ்தான இது? எனக்கு உங்களை பார்க்க ஆசையா இருக்கு. ஆனால் அங்க வரமுடியாம இப்படி கொரோனா வந்துடுத்தே. நீங்களும் இங்க வர முடியல. நீங்கள்ளாம் ஒவ்வொரு வருஷமும் வந்து நாமெல்லாம் ஆட்டம் பாட்டம்னு  ஜாலியா இருந்ததை நினைச்சிண் டிருக்கோம் நானும் தாத்தாவும். நீயும் க்ஷிதீஜும் வந்து எப்படியெல்லாம் விளையாடிண்டிருந்தேள். தினமும் சாயந்திரம் தாத்தா விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லித் தருவாளே! நாமெல்லாரும் மலைக்கோட்டை போனது நினைவிருக்கா? 'இவ்வளவு பெரிய மலைல ஏறணுமா'ன

குருக்ஷேத்திரம்

  தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸம்வேதா யுயுத்ஸவ : மாம்கா: பாண்டவாஸ்சைவ கிம்குர்வத் ஸஞ்சய : | பகவத் கீதையின் முதல் ஸ்லோகம் இது. ‘தர்ம யுத்தம்’ எனப்பட்ட மகாபாரதப் போர் நடந்த ‘தர்ம க்ஷேத்ரம்’ எனப் போற்றப்பட்ட புண்ணிய பூமி குருக்ஷேத்திரம். உலகிற்கு பக்தி, கடமை, தர்மம், ஞானம் இவற்றை எடுத்துச் சொன்ன கிருஷ்ண பரமாத்மாவின் திருவாக்கிலிருந்து உபதேசித்த பகவத் கீதை பிறந்த புண்ணிய பூமி. இத்தலத்தை மிதித்தாலும், வசித்தாலும், இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி, இங்குள்ள ஆலயங்களில் அருளாட்சி செய்யும் கடவுளரை வணங்கினாலும், நாம் செய்த அத்தனை பாவங்களும் நசித்துப் போகும். இத்தலத்தின் பெருமை, பழமையான வேதமான ரிக் வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. தானம், தர்மம், தவம், அறம் இவற்றில் சிறந்து விளங்கியதாலேயே பகவான் கிருஷ்ணன் பாரதப் போர் நடத்த இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்தார். ரிக் வேதம், ஸத்பத் ப்ரம்மன், ஜாபாலி உபநிஷத், பகவத் கீதை, புராணங்கள், மகாபாரதம் போன்ற பல புனித நூல்களில் போற்றப்பட்ட இந்த குருக்ஷேத்திரம் பிறந்த தியாகக் கதையைப் பார்ப்போமா? கவுரவ, பாண்டவர்களின் மூதாதையரில் ஒருவரான குரு மகாராஜா மகா தர்மங்களான உண

பாரீஸ் பயணம்..!

எனக்கு சிறுவயது முதலே ஏதாவது வெளிநாடு சென்றுவர வேண்டுமென்று ஆசை. அதிலும் பாரீஸூம் , ஸ்விட்சர்லாந்தும் என் கனவு இடங்கள்... ஆனால் எங்களைப் போன்ற நடுத்தரக் குடும்பத்தினருக்கு இதெல்லாம் கைக்கெட்டாத ஆசை என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்வது வழக்கம்! என்னுடைய ஆசை சில ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேறியதை நினைத்தால் ஒரேசிலிர்ப்பாக உள்ளது. என் மூத்த மகன் ஜெர்மனியில் , ஸ்டுட்கார்ட் நகரிலுள்ள உலகப் புகழ் பெற்ற 'மாக்ஸ் ப்ளான்க்' யூனிவர்ஸிடியில் டாக்டர் பட்டம் பெற்றுப் பணியாற்றிக் கொண்டிருக்கிறான். அவனைப் பார்க்க அங்கு சென்றபோது என்னுடைய கனவு இடங்களான பாரீஸையும் கண்டு ரசித்து, சுற்றிப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. பாரீஸ் உலகத்தின் பேரழகையெல்லாம் தன்னுள் வைத்திருக்கும் ஒரு அற்புத நகரம்! உலகத்தை ஆட்டிப் படைத்த மாவீரன் நெப்போலியன் அரசாண்ட இடம்! உலகத்தை தன் புன்னகையால் மயக்கிய மோனாலிசா ஓவியம் உருவானது இங்கேதான்! உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபில் டவர் கோபுரம் உள்ள நகரம்! மனதை மயக்கும் சோப்புகள் , மேக்கப் பொருட்கள், வாசனை சென்ட்டுகளின் தாய்நாடே பாரீஸ்தான்! உலகத்திலேயே இரவு கேளிக்கைகளின் மாபெ