அஞ்சல் நிலையம்
இன்றைய குழந்தைகளுக்கு அஞ்சல் நிலையம் பற்றித் தெரிய வாய்ப்பே இல்லை...கடிதம் எழுதுவதும் எப்படி என்று தெரியாது!
எட்டாம் வகுப்பு படிக்கும் என் பேத்திக்கு கடிதம் எழுதுவது என்னவென்றே தெரியாது! இன்றுதான் உலகமே உள்ளங்கையில் ஆயிற்றே!
அவள் இது பற்றி அறியவே இந்த கடிதம்!
அன்புள்ள ப்ரீத்தி
பாட்டி அநேக ஆசிகள். நீ எப்படி இருக்க? பொம்மைகுட்டி எப்படி இருக்கு? சமத்தா படிக்கறேளா? பாடமெல்லாம் ஸ்கூல்லருந்து வீடியோல வரதா? புரியற்தா?
அம்மா அப்பா நன்னா இருக்காளா? அப்பா அடிக்கடி டூர் போயிட்றாம்பியே..இப்போ அப்பாவோட நன்னா என்ஜாய் பண்றேளா? கொரோனாவால கிடைச்ச சான்ஸ்தான இது?
எனக்கு உங்களை பார்க்க ஆசையா இருக்கு. ஆனால் அங்க வரமுடியாம இப்படி கொரோனா வந்துடுத்தே. நீங்களும் இங்க வர முடியல. நீங்கள்ளாம் ஒவ்வொரு வருஷமும் வந்து நாமெல்லாம் ஆட்டம் பாட்டம்னு ஜாலியா இருந்ததை நினைச்சிண்
டிருக்கோம் நானும் தாத்தாவும்.
நீயும் க்ஷிதீஜும் வந்து எப்படியெல்லாம் விளையாடிண்டிருந்தேள். தினமும் சாயந்திரம் தாத்தா விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லித் தருவாளே!
நாமெல்லாரும் மலைக்கோட்டை போனது நினைவிருக்கா? 'இவ்வளவு பெரிய மலைல ஏறணுமா'னு சொன்ன நீ வேகவேகமா ஏறி முதல்ல போயிட்டயே. நீங்க ரெண்டு பேரும் அடிக்கடி சண்டை போட்டாலும் கொஞ்ச நேரத்தில மறந்து ஒண்ணா விளையாட ஆரம்பிச்சுடுவேள் இல்லையா?
நானும் தாத்தாவும் ஏப்ரல் ஆரம்பத்துல வந்து உங்களோடு இருந்துட்டு லீவ் விட்டதும் உங்களை அழைச்சிண்டு திருச்சி வருவோமே. ஒரு தடவை நாம நாலு பேரும் ட்ரெயின்ல First classல வந்தது ஞாபகமிருக்கா? அப்பதான நீங்க முதல் தடவையா ரயில்ல வந்தது. ப்ரியங்காக்கு குஷி தாங்காம டேன்ஸ்லாம் ஆடிண்டு வந்தாளே! மேல ஏறி இறங்கினு என்ன பாடு படுத்தினா இல்லையா?அதல்லாம் நினைச்சுண்டு உங்களைப் பார்க்க ஆசையா காத்துண்டிருக்கோம் நாங்க!
தினமும் ஸுப் ஐஸ்க்ரீம் நுங்குனு விதவிதமா சாப்டுண்டு ஜாலியா இருக்குமில்லையா? இனி அடுத்த லீவுக்குதான் வரலாம்.
வீடியோல ஸ்கூல் பாடமெல்லாம் புரியற்தா? Veterinary doctor ஆகணும்னு சொன்னியே.. அது சம்பந்தமான விஷயம்லாம் தெரிஞ்சுக்கோ. Blue cross trainingலாம் இப்போ கிடையாதில்லையா? அதல்லாம் இப்போ ரொம்ப miss பண்ணுவயே.
பொம்மைக்குட்டியோட சண்டை போடாத. அது உன்னை விட ஆறு வயசு சின்னக் குழந்தை. (எல்லாரும் அதை குழந்தைனு சொல்லியே ஏத்தி விடுங்கோனு நீ சொல்றது என் காதில விழற்து!) அவ புரியாம அப்பப்ப சண்டை போட்டா நீ கொஞ்சம் விட்டுக் கொடுத்து போ.
வேலைக்காரம்மா வராததால நீ இப்பல்லாம் அம்மாக்கு துணி உலர்த்தி, வீடு பெருக்கியல்லாம் help பண்றேனு ஃபோன்ல சொன்னியே..எனக்கு சந்தோஷமா இருந்தது. எப்பவும் அப்படி இருக்கணும்..ஓ.கேயா?
தினமும் ஸ்லோகமெல்லாம் சொல்றேளா? Godதான் நம்ம கஷ்டமெல்லாம் போக்கணும்னு வேண்டிக்கோ. நேரம் கிடைக்கும்போது மொபைல்ல பேசு.
இந்த லெட்டர் எதுக்கு நான் எழுதிருக்கேன்னு யோசிக்கறயா?
உனக்கு லெட்டர் எழுதறதைப் பத்தி தெரிஞ்சுக்க எழுதிருக்கேன். நாங்கள்ளாம் இப்படிதான் கடிதம் எழுதுவோம். பொறுமையா படிச்சு புரிஞ்சுக்கோ.
முன்னல்லாம் இப்போ மாதிரி மொபைல் கம்ப்யூட்டர் email ,phoneலாம் கிடையாது. நினைச்சா பேச முடியாது. எந்த விஷயமானாலும் லெட்டர்லதான் எழுதுவோம்.
நான் எங்கம்மாக்கு ஏன்..உன் அப்பா, அத்தைக்கல்லாம்
கூட இப்படிதான் லெட்டர் எழுதுவேன். கொஞ்சமா எழுத போஸ்ட் கார்ட், நிறைய விஷயம் எழுத Inland cover, Full cover, Envelopeனல்லாம் உண்டு. இப்படி எழுதும்போது எங்களுக்கல்லாம் அவாளோட நேர பேசற மாதிரி சந்தோஷமா இருக்கும். நான் இதை வாட்ஸப்ல அனுப்பிருக்கேன். படிச்சு நீ எப்படி enjoy பண்ணினேனு சொல்லு. Okயா!
சரிடா செல்லம்! அம்மா அப்பாவுக்கு என் wishes சொல்லு. உனக்கும்,பொம்மைக்கும் என் Lovely kisses! Bye!
உன்னைப் பார்க்க ஆசையோடு காத்திருக்கும்...
பாட்டி, தாத்தா
Comments
Post a Comment