சங்ககாலம் ஒரு பொற்காலம்!

 


1800 ஆண்டுகளுக்கு முன்பு முடியாட்சி தொடங்கிய காலம் சங்க காலம். அது பொற்காலமாகப் போற்றப் பட்டது. 


இதன் காரணம் அக்கால மக்களின் வாழ்க்கைமுறை, அரசியல், தமிழ்மொழி ஆட்சி, இலக்கியவளம், புலமைப்போற்றல், பண்பாடு நாகரிகம் இவையே.போர் நடந்தாலும் நாட்டு மக்களை பாதிக்கவில்லை.


தமிழ் மொழியே ஆட்சி மொழியாய் இருந்தது. அதன் காரணமாக பல தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் எழுதப்பட்டன.தமிழ்க் கல்வி சிறப்பாகப் போற்றப்பட்டது.


தமிழ்ப் புலவர்களான ஔவையார், பாடினியார் போன்ற பல பெண்பால் புலவர்கள் இருந்தனர். பெண்கள் பல உரிமைகள் பெற்றிருந்தனர்.


சாதி சமயப் பூசலும் தீண்டாமைக் கொடுமையும் அன்று இல்லை.


சிற்பம் ஓவியம் உழவு நெசவு ஆகிய தொழில்கள் சிறப்புற்று விளங்கின. 


நீர்வளமும் நிலவளமும் சிறப்பு பெற்றிருந்த சங்ககாலம்  தமிழகத்தின் பொற்காலமே!


Comments

Popular posts from this blog

தணிக்கை

காதல்

அசரீரி