விடுமுறை
ஞாலம் புகழும் ஞாயிறுக்கு இன்றும் இல்லை விடுமுறை!
சூரியன் உதித்த பின்னும் எழுந்திருக்க மனமில்லை!
இன்று விடுமுறை என்றாலே மனதில் வந்து ஒட்டிக் கொள்ளும் சோம்பல்!
ஆறு நாட்கள் ஓடிய ஓட்டத்துக்கு இன்று ஒருநாள் கட்டாய ஓய்வு!
சிறார்களின் விளையாட்டு சத்தம் வீதியை நிறைக்கும்!
தொலைக்காட்சி பெட்டிக்கு மட்டும் அன்று ஓய்வில்லை!
அம்மாக்களுக்கோ விடுமுறை இல்லாத அடுப்படி வேலை!
Comments
Post a Comment