துணிவே துணை
நாள்தோறும்...
துணிவே துணை..
சாதனை படைக்கவும் சரித்திரத்தில் இடம் பெறவும் துணிவு வேண்டும்..
கனவில் மகிழ்ந்து அந்தக் கனவை நனவாக்க துணிவு வேண்டும்...
'இந்தச் செயலை நீ செய்வது கடினம்' என்போரின்
பேச்சை புறம் தள்ளி அதனை நிறைவேற்றிக் காட்ட துணிவு வேண்டும்...
அறிவுரை சொல்பவரை அலட்சியம் செய்து நாம் நினைத்ததை செயல்படுத்த துணிவு வேண்டும்...
வாழ்க்கை எனும் சறுக்கு மர விளையாட்டில் ஏறினாலும் இறங்கினாலும் நம்பிக்கை இழக்காமல் வெற்றிபெறத் துணிவு வேண்டும்...
Comments
Post a Comment