Posts

தணிக்கை

Image
தேவையான கருத்துக்களை ஏற்றுக் கொள்வோம்..! தேவையற்ற கருத்துக்களை தணிக்கை செய்வோம்! நடக்கக் கூடும் நம்பிக்கைகளை  மனதில் கொள்வோம்! தேவையற்ற எண்ணங்களை தணிக்கை செய்வோம்! பிள்ளைகளை நல்லவழி நடக்க அறிவுரைப்போம்! நல்லன அல்லாத வழிகளை தணிக்கை செய்வோம்!

ஆரோக்கியம்

Image
காலை எழுந்ததும் கண்மூடி தியானித்து கருத்தொருமிப்போம்! நடையும் ஓட்டமும் நாளும் பழகினால் நன்மைகள் பலப்பல! அறுசுவை உணவில் உள்ளது ஆரோக்கியம்! அதையும் அளவாய் சாப்பிட்டால் அருமருந்தாகும் நிச்சயம்! அதிக நேர உறக்கம் சோம்பலை ஏற்படுத்தும்! அரை வயிறு உண்போம்!அளவாய் தூங்குவோம்! அனுதினமும் உழைப்போம்! ஆரோக்யமாய் வாழ்வோம்!

அசரீரி

Image
அசரீரி புராண காலங்களில் ஒலித்ததாகவும் அதன்படியே நடந்ததாகவும் கதைகளில் படித்ததுண்டு. கம்சனுக்கு வானிலிருந்து ..உன் சகோதரியின் எட்டாவது மகன் உன்னைக் கொல்வான்..என்ற அசரீரி கேட்டதாலேயே அவன் தேவகியின் ஏழு குழந்தைகளைக் கொன்றான். இந்தக் காலத்தில் நாம் ஏதாவது பேசும்போது பல்லி கத்தினால் அந்தக் காரியம் நடக்கும் என்பர். 'பல்லி சொல்லுக்கு பலன்'என்று பஞ்சாங்கத்தில் உண்டு. இதுதான் இந் நாளைய அசரீரி. நாம் நிறைய பேர் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு ஒரு நல்ல விஷயம் பேசும்போது..அதெல்லாம் சரிவராது..என்று நமக்கு சம்பந்தமில்லாதவர்  வேறு விஷயத்துக்கு  சொல்லும் போது சட்டென்று அது நமக்கு அபசகுனமாகத் தோன்றும். அதனால்தான் திருமணங் களில் தாலி கட்டும் நேரம் கெட்டிமேளம் ஒலிக்கப் படுவது. யாரும் அந்த நேரத்தில் அபசகுனமாகப் பேசினால் காதில் விழாது.

காதல்

Image
காதல்..அந்த வார்த்தை எந்த மனிதரையும் சிலிர்க்க வைக்கும். மகிழ்ச்சி தரும்.  காதல் என்றாலே மனம் வானத்தில் பறக்கும். அந்தக் காதலியோ காதலனோ உடனிருந்து விட்டால் மனமும் உடலும் துள்ளிக் குதிக்கும்.  கண்கள் கிறங்க மனது கும்மாளமிட  இப்படியே வாழ்நாள் முழுதும் இருந்துவிட மாட்டோமா என்று எண்ணத் தோன்றும். சின்னச்சின்ன ஊடல்கள் பிரிவதற்கல்ல  காதலை வளர்ப்பதற்கு. காதல் வந்துவிட்டால் மனம் கும்மாளம் போடும்.. வானத்துக்கும் பூமிக்கும்  துள்ளிக் குதிக்கும்.

சங்ககாலம் ஒரு பொற்காலம்!

Image
  1800 ஆண்டுகளுக்கு முன்பு முடியாட்சி தொடங்கிய காலம் சங்க காலம். அது பொற்காலமாகப் போற்றப் பட்டது.  இதன் காரணம் அக்கால மக்களின் வாழ்க்கைமுறை, அரசியல், தமிழ்மொழி ஆட்சி, இலக்கியவளம், புலமைப்போற்றல், பண்பாடு நாகரிகம் இவையே.போர் நடந்தாலும் நாட்டு மக்களை பாதிக்கவில்லை. தமிழ் மொழியே ஆட்சி மொழியாய் இருந்தது. அதன் காரணமாக பல தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் எழுதப்பட்டன.தமிழ்க் கல்வி சிறப்பாகப் போற்றப்பட்டது. தமிழ்ப் புலவர்களான ஔவையார், பாடினியார் போன்ற பல பெண்பால் புலவர்கள் இருந்தனர். பெண்கள் பல உரிமைகள் பெற்றிருந்தனர். சாதி சமயப் பூசலும் தீண்டாமைக் கொடுமையும் அன்று இல்லை. சிற்பம் ஓவியம் உழவு நெசவு ஆகிய தொழில்கள் சிறப்புற்று விளங்கின.  நீர்வளமும் நிலவளமும் சிறப்பு பெற்றிருந்த சங்ககாலம்  தமிழகத்தின் பொற்காலமே!

இன்று உலக தம்பதியர் தினம்..💞💕💏

Image
  இன்று உலக தம்பதியர் தினம்..💞💕💏 ஒருவராய்ப் பிறந்தோம்.. இருவராய் இணைந்தோம்.. இதயத்தால் கலந்தோம்.. ஒருவருக்கொருவர்  விட்டுக் கொடுத்து  மனதால் இணைந்து சின்னச் சின்ன சந்தோஷங்களையும் இணைந்து ரசித்து.. எத்தனை கஷ்டம்  வந்தாலும் அதனை  எதிர்நோக்கி  வெற்றி கண்டு... ஆசை அன்பு நேசம் பாசம் அனைத்திலும் இணை பிரியாமல்.. இன்றுபோல் என்றும் இனிமையாய் வாழ இதயம் கனிந்த  தம்பதியர் தின நல்வாழ்த்துக்கள்!

கண்ணாமூச்சி

Image
ஒவ்வொரு கண்ணாமூச்சி விளையாட்டிலும் ஒரே இடத்தில் ஒளியும் தம் குழந்தைகளை ஒரு முறை கூட கண்டு பிடிக்க முடிவதில்லை பாசமுள்ள அப்பாக்களால்!   அதே பிள்ளை பின்னால் அப்பாவை மறந்து வேறிடத்தில் பாசம் வைத்து விலகிச் சென்று கண்ணாமூச்சி ஆடுகிறான் பாவப்பட்ட பாசத் தந்தையோடு!