ஒவ்வொரு கண்ணாமூச்சி விளையாட்டிலும் ஒரே இடத்தில் ஒளியும் தம் குழந்தைகளை ஒரு முறை கூட கண்டு பிடிக்க முடிவதில்லை பாசமுள்ள அப்பாக்களால்! அதே பிள்ளை பின்னால் அப்பாவை மறந்து வேறிடத்தில் பாசம் வைத்து விலகிச் சென்று கண்ணாமூச்சி ஆடுகிறான் பாவப்பட்ட பாசத் தந்தையோடு!
அசரீரி புராண காலங்களில் ஒலித்ததாகவும் அதன்படியே நடந்ததாகவும் கதைகளில் படித்ததுண்டு. கம்சனுக்கு வானிலிருந்து ..உன் சகோதரியின் எட்டாவது மகன் உன்னைக் கொல்வான்..என்ற அசரீரி கேட்டதாலேயே அவன் தேவகியின் ஏழு குழந்தைகளைக் கொன்றான். இந்தக் காலத்தில் நாம் ஏதாவது பேசும்போது பல்லி கத்தினால் அந்தக் காரியம் நடக்கும் என்பர். 'பல்லி சொல்லுக்கு பலன்'என்று பஞ்சாங்கத்தில் உண்டு. இதுதான் இந் நாளைய அசரீரி. நாம் நிறைய பேர் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு ஒரு நல்ல விஷயம் பேசும்போது..அதெல்லாம் சரிவராது..என்று நமக்கு சம்பந்தமில்லாதவர் வேறு விஷயத்துக்கு சொல்லும் போது சட்டென்று அது நமக்கு அபசகுனமாகத் தோன்றும். அதனால்தான் திருமணங் களில் தாலி கட்டும் நேரம் கெட்டிமேளம் ஒலிக்கப் படுவது. யாரும் அந்த நேரத்தில் அபசகுனமாகப் பேசினால் காதில் விழாது.
நாள்தோறும்... "வ்ருஷாலி! அவளை வெளியே போகச் சொல்லு. நான் ராக்கியெல்லாம் கட்டிக்கொள்ள தயாராக இல்லை. எனக்கும், அவளுக்கும் எந்த உறவும் இல்லை" ராகேஷ் கோபத்துடன் வெளியே சென்று விட்டான். ஷீலாவுக்கு அழுகை வந்து விட்டது. வ்ருஷாலியின் தோள் மேல் சாய்ந்து அழ ஆரம்பித்து விட்டாள். "அண்ணி! நான் என்ன பெரிய தப்பு செய்து விட்டேன்? என் மனதுக்குப் பிடித்தவரைக் கல்யாணம் செய்து கொண்டது தப்பா? சுந்தர் என்னை எப்படி வைத்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா?" "அழாதே ஷீலா! நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டேன். உன் அண்ணன் மனதை மாற்றவே முடியவில்லை. நீ ஏதோ மிகப்பெரிய தப்பு செய்து விட்டதாகச் சொல்கிறார். நான் என்னம்மா செய்வது?" வ்ருஷாலியின் இயலாமை அவள் பேச்சில் தெரிந்தது. "அண்ணா எப்பவுமே அப்படித்தானே அண்ணி! தான் எடுத்த முடிவிலிருந்து மாறவே மாட்டார். நான் இதுவரை ஒரு வருஷம் கூட ரக்க்ஷா பந்தனுக்கு அண்ணனுக்கு ராக்கி கட்டி, திலகம் வைக்காமல் இருந்ததில்லை. அண்ணன் இந்த ஒன்பது மாதத்தில் கொஞ்சமாவது மனம் மாறியிருப்பார் என்று நினைத்து தான் வந்தேன்". "உன்னை நினைத்து எனக்கு மிக வரு...
Comments
Post a Comment