மைவிழிப்பார்வை
கண்ணே! என்னழகு சித்திரமே!
உன் மைவிழிப் பார்வையில்
என் மனம் மயங்கிப் போனதம்மா!
நின் கயல்விழி பார்வையிலே
என் அங்கமெல்லாம் சிலிர்க்குதம்மா!
எனைக் கண்டு நீ சிரிக்கையிலே நான் பட்ட வலியெல்லாம் போனதம்மா!
உனைக் கட்டியணைத்து முத்தமிட ஆவலைத் தூண்டுதம்மா!
உனைக் காண்போர் உன் அழகைப் பற்றி புகழ்ந்து பேசும் போதெல்லாம் என் மனம் பதைக்குதடி!
மையிடாமலே மயக்கும் உன்னழகில் அடுத்தவர் கண் படாதிருக்கவே உன் பட்டுக் கன்னத்தில் பெரிதாக வைக்கிறேன் ஒரு கரும்பொட்டு!
ஆராரோ..ஆரிரரோ! உன் அழகு மைவிழிகளை மூடி நீ தூங்கடி என் கண்ணே! செல்லப் பெண்ணே!
Comments
Post a Comment