வீணை
வீணையை மீட்டினேன்..
ராகம் பிறந்தது!
வீசும் தென்றல் தீண்டும்வேளை
பேசும் எந்தன்
அழகிய வீணை !
என் உடல் தோறும்
ஊறுமென் காதலை
உருக்கமாக மீட்டுமே என்
வீணையின் தந்திகள்!
இசையே ! நீ என்
சுவாசத்தில் கலந்து
விரல் வழி அசைந்து
வீணையை மீட்டுகிறாய் - இசை
மோகத்தைக் கூட்டுகிறாய்
தீண்டினேன் தீண்டவும்
வீணையும் தந்ததே என்
நாயகன் நகைக்கின்ற
மன்மத ராகம் !
Comments
Post a Comment