அன்பெனும் அழகிய குணம்..


நாள்தோறும்..

அன்புக்கு உண்டோ அடைக்கும்தாழ்..

அனுபவிப்பவரே அறிவர் அன்பின் மகிழ்ச்சியை..
மௌனவார்த்தைகளும்
கோபமும் கூட அன்பின் வெளிப்பாடுகளே..

கிடைத்த அன்பை நிலைக்க வைப்பதே சுகம்..
நமக்கு பிடித்தவரிடம் கெஞ்ச வைப்பது அன்பு..
நம்மைப் பிடித்தவரைக் கொஞ்ச வைப்பதும் அன்பே..

அழகை விட அன்பைத் தரும் உள்ளமே அழகானது..
அறிவாளிகளை விட அன்பானவரையே நம் மனம் விரும்புகிறது..

அன்புக்கு ஏங்குபவரே நாம் அன்பு செலுத்த ஏற்றவர்..
அன்பும் அக்கறையும் இணைந்ததே இனிய வாழ்வு..

பிடித்தவரிடம் அன்பு செய்வதை விட பிடிக்காதவரையும் தன்வயப் படுத்துவதே பேரன்பு..
வாழ்க்கையின் பக்கங்களை அழகாக்கும் எழுதுகோல் அன்பு..

தாயிடம் மட்டுமே கிடைப்பது தூய அன்பு..
நெஞ்சிலும் தோளிலும் சுமப்பது தந்தையன்பு..
காதலும் காமமும் கலந்தது
துணையின் அன்பு..
பாசமும் பரிவும் பிணைந்தது
பிள்ளைகள் அன்பு..

அன்புடன் பேசுவோம்..!
அவரவர் இடத்திலிருந்தே..!
அது நம் உறவை பலப்படுத்தும்..!
நம்மை ஒன்றுபடுத்தும்..!

அன்பை விதைப்போம் - அதில்
மகிழ்ச்சி எனும் பூக்களை அறுவடை செய்வோம்..!

இன்பம்  கூட்டி 
இனிய ராகம் மீட்டி
இணைந்து வாழ்வோம்
இதயம் கலந்த அன்பினிலே!

Comments

Popular posts from this blog

கண்ணாமூச்சி

அசரீரி

இணைந்த மதங்கள்