பதைபதைப்பு..
அத்யாவசியமாய் வெளியில் செல்லும்போது பதைபதைக்கும் மனதைக் கட்டுப் படுத்த முடியவில்லை..
ஒரு அடி தூரத்தில் யார் வந்தாலும் ..இவருக்கு கொரோனா இருக்குமோ?..என்ற பதைபதைப்பு..
எவர் இருமினாலும் தும்மினாலும் ஏதோ நமக்கு கொரோனா வந்து விடுமோ என்ற பதைபதைப்பு..
மனிதர் பாம்பையோ சிங்கத்தையோ புயலையோ மழையையோ வெள்ளத்
தையோ கண்டு பதைபதைக்கலாம்..
அடுத்தவர் நம்மை அன்புடன் அணைப்பதோ கை கொடுப்பதோ இன்று நம்மை பயமுறுத்தும் விஷயங்கள்..
மனிதரை மனிதரே கண்டு பயந்து பதைபதைத்து ஒதுங்கும் இந்த நாள் விரைவில் மாற இறைவனிடம் இறைஞ்சுவோம்🙏
Comments
Post a Comment