நெஞ்சில் பெய்த மாமழை..
கண்ணிலே கலந்தாய்!
எண்ணத்தில்நின்றாய்!
வண்ண வண்ணக் கனவுகளை
வாரித் தெளித்தாய்!
திண்ணமான உன் அன்பில்
விண்ணிலே பறந்தேன்!
சின்னச் சின்ன சந்தோஷங்களை
சன்னமாய் அனுபவித்தோம்!
அழகான பிள்ளைகள்!
அறிவாக வளர்த்தோம்!
சிறப்பான கல்விதனை
சீராகக் கொடுத்தோம்!
தீமைகள் விலக்கி
திறமைகள் வளர்த்தோம்!
பெருமையான தருணங்களில்
உரிமையுடன் உடனிருந்தோம்!
அவரவர் பாதையில் சென்றபின்
இன்பமாய் நாம் இருவர் மட்டுமே!
இதயம் மகிழ வையகம் சுற்றுவோம்!
இனி என்றென்றும் நமக்கு தேனிலவே!
ஆனந்தமாய் நம் நெஞ்சில் மாமழையாய்..
காதல் வாழ்வை இனி
காவியமாய்த் தொடர்வோம்!
கவிதையாய் வாழ்வோம்!
Comments
Post a Comment