அசரீரி




அசரீரி புராண காலங்களில் ஒலித்ததாகவும் அதன்படியே நடந்ததாகவும் கதைகளில் படித்ததுண்டு. கம்சனுக்கு வானிலிருந்து ..உன் சகோதரியின் எட்டாவது மகன் உன்னைக் கொல்வான்..என்ற அசரீரி கேட்டதாலேயே அவன் தேவகியின் ஏழு குழந்தைகளைக் கொன்றான்.

இந்தக் காலத்தில் நாம் ஏதாவது பேசும்போது பல்லி கத்தினால் அந்தக் காரியம் நடக்கும் என்பர். 'பல்லி சொல்லுக்கு பலன்'என்று பஞ்சாங்கத்தில் உண்டு. இதுதான் இந் நாளைய அசரீரி.

நாம் நிறைய பேர் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு ஒரு நல்ல விஷயம் பேசும்போது..அதெல்லாம் சரிவராது..என்று நமக்கு சம்பந்தமில்லாதவர்  வேறு விஷயத்துக்கு  சொல்லும்
போது சட்டென்று அது நமக்கு அபசகுனமாகத் தோன்றும்.

அதனால்தான் திருமணங்
களில் தாலி கட்டும் நேரம் கெட்டிமேளம் ஒலிக்கப் படுவது. யாரும் அந்த நேரத்தில் அபசகுனமாகப் பேசினால் காதில் விழாது.

Comments

Popular posts from this blog

தணிக்கை

காதல்